எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் அப்பகுதிவாசிகள் 32 பேர் கொல்லப்பட்டதாக சூடான் நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இதில், 4 பெண்கள், 10 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எல்-பஷர் நகரத்தின் அருகிலுள்ள ஜம்ஜம் நிவாரண முகாமின் மீதும் துணை ராணுவப்படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக சூடானின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து, வடக்கு தர்பூரின் சுகாதாரத் துறை அமைச்சர் இப்ராஹிம் காதிர் கூறுகையில், ஜம்ஜம் முகாமானது நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் தகவல் பரிமாறும் வசதிகளிலுள்ள குறைபாட்டினாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தெளிவானத் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, 2 ஆண்டுகளாக சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் ஜம்ஜம் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்ஜம் முகாமின் மீது துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலில் அங்கு வசித்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 25-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


