Idhayam Matrimony

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
Nakselit

Source: provided

சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திராவதி பகுதியில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்களும், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் குவியல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, சத்தீஸ்கரில் பல்வேறு மோதல்களில் இதுவரை 138 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பிஜப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 122 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து