எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்ட விரோதம். தன்னிச்சையாக செயல்பட்டு அவற்றை தடை செய்வதற்கான ‘வீட்டோ’ அதிகாரமோ, நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கான ‘பாக்கெட் வீட்டோ’ அதிகாரமோ ஆளுருக்கு கிடையாது.
மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு ‘வீட்டோ’ அதிகாரமோ, ‘பாக்கெட் வீட்டோ’ அதிகாரமோ கிடையாது. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, ‘‘வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, மசோதா குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


