Idhayam Matrimony

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      தமிழகம்
John-Jebaraj 2024-04-13

Source: provided

கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த ஆண்டு நடந்த விருந்து நிகழ்ச்சியில் 2 சிறுமிகளுக்கு மதபோதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அவரைத் தேடி வந்தனர். மேலும் அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கேரள மாநிலம், மூணாறில் பதுங்கியிருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை கோவை அழைத்து வந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஏப்.25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து