எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
உக்ரைனின் சுமி நகரத்தில் குருத்தோலை ஞாயிறுவைக் கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
சுமி தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் 'டஜன் கணக்கானவர்கள்' கொல்லப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.
சுமி நகரின் தற்காலிக மேயர் ஆர்டெம் கோப்சார் கூறியதாவது: பிரகாசமான குருத்தோலை ஞாயிறு அன்று, எங்கள் சமூகம் ஒரு பயங்கரமான சோகத்தை சந்தித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக எங்களுக்கு ஏற்கெனவே தெரியும் . இவ்வாறு அவர் சமூக ஊடகங்களின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. அதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இந்தச் சூழலிலும் ரஷ்யா மீது உக்ரைனும் அந்த நாட்டின் மீது ரஷ்யாவும் தங்களது தாக்குதலைத் தொடா்ந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


