Idhayam Matrimony

தமிழகத்தில் நீட் விலக்கை முதல்வர் பெற்று தருவார் : சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

நெல்லை : தமிழகத்தில் நீட் விலக்கை முதல்வர் போராடி பெற்று தருவார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ-அதே போல நீட் தேர்வை ஒழிப்பது குறித்து மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டு கொண்டு செல்லப்பட்டு நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தருவார். மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நீட் விலக்கை முதலமைச்சர் போராடிக் கொண்டு வருவார். தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து