எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


