Idhayam Matrimony

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      உலகம்
Israel

Source: provided

டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து