Idhayam Matrimony

குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      இந்தியா
Poothai-2025-02

Source: provided

ஆமதாபாத் : குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. இதில், 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இதுபற்றி இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்தியில், குஜராத் கடலோர பகுதியருகே மேற்கொண்ட சோதனையின்போது, எங்களுடைய கப்பலை கடத்தல்காரர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவர்கள் உடனே, போதை பொருட்களை கடலுக்குள் வீசி விட்டு தப்பி செல்ல முயன்றனர். அந்த போதை பொருட்கள் கடலில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன்பின்னர் பயங்கரவாத ஒழிப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு எதிரான கூட்டு படையின் வலுவான சக்திக்கான பரிசோதனை இதுவாகும் என அதுபற்றி அவர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து