எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேச முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவர் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நீண்ட இழுபறிக்குப்பின் கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே உள்துறை மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளனர். அன்றே செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து கூட்டணி குறித்து அறிவித்துவிட்டோம். ஆகையால், நீண்ட இழுபறிக்கு இங்கு இடமில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, துணை முதல்வர் பதவி என்பது குறித்த இப்போது பேசமுடியாது. தமிழகத்தில் தேசிய கூட்டணி அமையும். அதன் தலைவராக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். நெல்லையில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேசிய ஜனநாய கூட்டணிக்குதான் மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக உள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


