எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து,செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் என்று அண்மையில் அமித் ஷா அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் முதன்முறையாகக் கூடுவதால் இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் சூழலிலும், பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் இந்த செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. எனவே இதில் கூட்டணி தொடர்பான மூத்த தலைவர்கலின் கருத்து, கடைநிலைத் தொண்டர்கள் மனநிலை பற்றி ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


