எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு உள்ளது என சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கடையநல்லூர் எம்.எல்.ஏ. செ.கிருஷ்ணமுரளி, எச்.ஐ.வி. நோய்த் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசும்போது, “தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 நபர்கள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1 லட்சத்து 41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர எச்.ஐ.வி. தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.5 கோடி வைப்பு நிதியை கொடுத்தார். அது தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்மூலம் எச்.ஐ.வி.யால் பதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


