எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கி தீர்வுகான வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லத் தடையானது அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று தடைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய துறைமுகமான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தடைக்காலம், ஜூன் 15 ஆம் தேதி வரை உள்ள நிலையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இரு நாட்டு மீனவர்கள் பரஸ்பரத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபடவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


