Idhayam Matrimony

கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டு உரிமைகளில் அனைவரும் ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1 2024-06-24

Source: provided

சென்னை : தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம். அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர், அவ்வியக்கத்தை வழிநடத்திய ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி என்னதான் தி.மு.க.விற்கும், அவர்களுக்கும் மாற்று கருத்து, மாறுபாடு, வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு தரமுடியாது என்கிற நிலைமையில் இருந்து பல கோரிக்கைகளை ஆதரித்து இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று புரியலை. ஆனா அது நமக்கு புரியும். பேசும்போது சொல்வார்கள் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்கள். அதைத்தான் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.  இதுதான் கொள்கையா? அந்த கேள்வியைத்தான் கேட்க வேண்டி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டினுடைய நன்மையை கருதி, அதன் உரிமையை கருதி, நமக்கு இருக்கக்கூடிய சுயாட்சியை கருதி நான் அவர்களுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை, தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்த பணியை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நன்றி கூறி அமர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து