எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்...
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வீரர்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும். ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கௌரவமாக கருதுகிறேன்....
ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றதை உண்மையில் சிறந்த கௌரவமாக கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் சிறப்பானது.
எப்போதும் நினைவில்...
இந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்திய அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி. அணியில் உள்ள சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய அணியின் ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஷுப்மன் கில்...
ஐ.சி.சி.யின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் வென்றிருந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான விருதினை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


