எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து பா.ஜ.க. தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. பா.ஜ.க. யுவமோர்ச்சா பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


