எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாநிலங்களவை பதவிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பெற்ற வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்தினம் முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
முன்னதாக முதல்வரை சந்திக்க வந்த கமல்ஹாசனிடம், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், "Celebrating CM" என ஆங்கிலத்தில் பதில் அளித்தார். முதல்வர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மாநிலங்களவை சீட்டுக்காக நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். சீட் முடிவு செய்யப்பட்டு கட்சியில் முடிவு செய்து அறிவிக்கும்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது வந்திருப்பது கொண்டாடுவதற்காக. இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட், கவர்னர் வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன்.
நமக்கு சாதகமானது என்பதை விட இந்தியாவிற்கு சாதகமானது. இந்த தீர்ப்பு இவர்கள் போட்ட வழக்கில் வந்திருக்கிறது என்பதால் கொண்டாடப்பட வேண்டியவர் முதல்-அமைச்சர் . தேசிய அளவில் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


