Idhayam Matrimony

அமைச்சர் பொன்முடி விவகாரம்: அ.தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
ADMK 2025-04-16

Source: provided

சென்னை : அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மகளிரணியினர் முழக்கம் எழுப்பினர்.

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதாவது, தி.மு.க.வில் அவர் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் இன்னும் தொடர்கிறார். இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சரோஜா உள்பட அ.தி.மு.க. மகளிரணியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

அமைச்சர் பொன் முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து