Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளின் குரல் இனி உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல். என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலர் பயன் அடைந்து வருகிறார்கள்.அந்த வரிசையில் அவர்களுக்கு மேலும் ஒரு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை சட்டமன்றத்தில் (நேற்று) முன்மொழிந்தேன். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து