எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார்.
கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், "வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல.
நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்துள்ளனர். மேலும் இந்த நாட்டை உருவாக்க நாம் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். பாகிஸ்தானின் கதையை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களின் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல மறக்காதீர்கள். அதன்மூலம் பாகிஸ்தானுடனான அவர்களின் உறவுகள் பலவீனமடையாமல் இருக்கும். தீவிரவாதிகளை நாம் விரைவில் விரட்டியடிப்போம். என்று தெரிவித்தார்.
கஷ்மீரைப் பற்றி பேசிய அசின் முனீர், "எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, அது (காஷ்மீர்) எங்களுடைய கழுத்து நரம்பு, எங்களின் கழுத்து நரம்பாக இருக்கும். நாங்கள் எங்களின் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரமிக்க போராட்டத்தில் விட்டுவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


