Idhayam Matrimony

மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      இந்தியா
Modi 2024-10-24

புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார். 

வடக்கு ஐரோப்பா, ஆர்க்டிக் மற்றும் வட அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை நார்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு வரும் மே 15 மற்றும் 16 தேதிகளில் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற உள்ளது.

இதில், வர்த்தகம், புத்தாக்கம், பசுமை மாற்றம், காலநிலை மாற்றம், நீல பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் போர் உட்பட சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 15-ம் தேதி நார்வே செல்ல இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரட்ரிக்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த குரேஷியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுதான் முதல் முறை ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து