Idhayam Matrimony

கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.

தமிழக சட்டசபையில் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியது அவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ அன்பழகன் இடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:

கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் : எங்களது தொகுதியில் 3 அணைக்கட்டு கட்ட வேண்டும். ஒரு அணைக்கட்டாவது கட்ட வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: முன்பு கேட்ட கேள்வி. தற்போது உறுப்பினர் கேட்கும் கேள்வி வேறு. கேள்வி ஒரு பதிலை தயார் செய்ய வேண்டும் என்றால், உறுப்பினர் வேறு எந்த கேள்வி எல்லாம் கேட்டு உள்ளார் என்று கேட்டு அதற்கான பதிலை தயார் செய்து வருவோம். அப்போது தான் அவர் அதை மீறி போக முடியாது. இந்த மாதிரி நேரத்தில் தனிக் கேள்வி போட்டு இருக்க வேண்டும். அன்பழகனுக்கு ஒரு அணையாவது நான் கட்டி தருகிறேன்.

பேரவைத் தலைவர்: உங்களின் நீண்ட நெடிய நீர்வளத்துறை அனுபவம் மற்றும் ஞாபக சக்தியை பார்த்து பதில் கிடைக்கும் என்று நம்பி கேள்வி கேட்கிறார்கள்

துரைமுருகன் : தற்போது கூட ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன். இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கும் போது நான் கூறுவது தவறாக இருக்க கூடாது என்ற பயமும் உள்ளது" இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து