Idhayam Matrimony

என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
Jail

Source: provided

புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும். ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கெனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் ஹேப்பி பாசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில், ஹேப்பி பாசியா மீது 18 குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானத்தை என்ஐஏ அறிவித்திருந்தது. இந்த நிலையில், என்ஐஏவால் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்காவில் போலீஸார் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து