Idhayam Matrimony

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      தமிழகம்
anna-university 2025-01-21

Source: provided

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு வியாழக்கிழமை மாலை இமெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை காலை குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 12 ஆவது முறையாக வெடிகுண்டு தொடர்பாக மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை புரளி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மர்ம நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் நிலையில்,சில நாள்களுக்கு முன்பாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டை அறை 100-க்கு தொடர்கொண்டு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதும், அவர் தனது தந்தையின் செல்போன் மூலம் பேசியது விசாரணையில் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து