எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது. என்றும் இந்த முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை வேறு யாரும் ஆளமுடியாது என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில்நடைபெற்ற அரசு விழாவில்,முதல்வர் ஸ்டாலின் கலந்து திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி பேசியதாது:-
இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் -பத்திரிகையிலும் படித்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்குநம்முடைய அரசு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற=அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தைஅறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும்உள்ளாட்சி அமைப்புகளில்,15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல், ஒலிக்கப் போகிறது.
இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும்,வளர்ந்திருக்கிறது! தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது! இதைத்தான் சிலரால்,பொறுத்துக்கொள்ள முடியவில்லை! ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக்,குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டுவருகிறார்கள். சட்டம் - ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும்,தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள்தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பானஎதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள்மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன்உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த,சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது! தி.மு.க.வைபொறுத்தவரைக்கும்நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும் -மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும் வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் -தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களைன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில்வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மாநிலஉரிமையின் அகில இந்திய முகமாக தி.மு.க.தான் இருக்கிறது.
சமீபத்தில், சென்னை வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா நாம் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல், திசைதிருப்புவதற்காக இதையெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றுபேசினார். அதாவது இதையெல்லாம் பேசி, நாம் திசை திருப்புகிறோம் என்றுஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாசொல்லிவிட்டுப்போயிருக்கிறார். நான் சொல்ல விரும்புவது, இந்தியாவில் இருக்கின்றஅனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது.மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும்செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரைக்கும் சென்று நாம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றோம்.
தி.மு.க-வின் ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல,இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது.இதுதான் தி.மு.க-வின் பவர். உண்மை இப்படி இருக்கும்போது, திசை மாறி,சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கின்ற எங்களைபார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்… நான்கேட்கிறேன்.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாஅவர்களே… “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்லமுடியுமா? “இந்தியை திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க,முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்”என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின்பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவானபதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை.அடுத்து, சிறிது நாட்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக்கு நம்முடையபிரதமர் இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்திற்கு வந்தார்கள், பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார்கள்.வரட்டும். அதை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்கேஎன்ன பேசிவிட்டு போனார்? “எவ்வளவு கொடுத்தாலும் இங்கேஅழுகிறார்கள்” எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோமாம் என்றுபேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு,மரியாதையோடு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது,ஒன்றிய,அரசிடம்கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?”யார் கேட்டது, நீங்கள் கேட்டது? அதனால் தான் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் பேசியது என்ன? குஜராத் முதலமைச்சராக. மோடி இருந்தபோது, ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம்,செய்கிறார்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதிவழங்குவதில்பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார்.
யார் .மோடி. இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்றசொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அதுதமிழ்நாட்டின் உரிமை! நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய்யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்குக் கை கொடுப்போம் –உரிமைக்கு குரல் கொடுப்போம் – நமக்கு யார் கற்றுக் கொடுத்தது? – யார்,நமக்கு சொல்லிக் கொடுத்தது - கலைஞர்.அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான்!அதற்கு அடையாளம்தான். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாதவகையில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நாங்கள்அமைத்திருக்கின்ற மாநில சுயாட்சிக் குழு! எப்படி கலைஞர், ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதல்வர்கள் எல்லாம்தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின்மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள்பெற்றுத் தருவோம்!
மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், இங்கே உள்ளமக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். இதைத்தான் நான்சட்டமன்றத்தில் சொன்னேன், “ஒரு தாய்க்கு தான் தன் குழந்தைக்கு என்னதேவை என்று தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்கவேண்டும் என்றுஎங்கேயோ டெல்லியில் இருப்பவர்கள் தீர்மானித்தால், அந்த தாய் பொங்கிஎழுவாள்” என்று சட்டமன்றத்திலும் பதிவு செய்தேன்.ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையைஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல்கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதைசெய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசேவெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளிவிவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும்மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய,திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம்என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல்,இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்!நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளைஎல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் –
டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய பார்முலா இங்கேதமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல்திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமேடெல்லிக்கு தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரைமிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள்பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கைபார்ப்போம்.
நான் கேட்பது தமிழர்களை எப்படியெல்லாம் நீங்கள்கொச்சைப்படுத்தினீர்கள். அண்மையில் கூட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரீகம் இல்லாதவர்கள்என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டாரே. அதற்கு முன்னால் இன்னொரு,ஒன்றிய அமைச்சர், தமிழர்கள் வெடிகுண்ட வைப்பவர்கள் என்று சொல்லிபிறகு மன்னிப்புக் கேட்டார். நீங்கள் ஒடிசாவில் பேசினீர்களே, பூரி,ஜெகந்நாத் கோயிலின் கருவூல சாவியை திருடி தமிழ்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களும், பிரதமரும் ஒடிசாவிற்கு சென்றுபேசினீர்கள்! தமிழ்நாட்டைச் சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் இருக்கிறார் என்பதற்காக, ஒரு தமிழர் ஒடிசாவை=ஆளாலாமா? என்று கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தினீர்களே!அதுபோல, இங்கே செய்ய முடியாது. இங்கே நீங்கள் தன்மானமும், தமிழினமானமும் இல்லாத கொத்தடிமைகளின் துரோகக் கூட்டணியில்சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். கொஞ்சம் வரலாற்றைஎடுத்துப் பாருங்கள். சுய மரியாதையும், மானமும், வீரமும், விவேகமும்,நல்லிணக்கமும் உள்ள மண் எங்கள் தமிழ் மண்.ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காதமானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள்,எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று,எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.,நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் -இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது.தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை: எலான்
19 Jul 2025நியூயார்க் : அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சித் தொடங்கினேன் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
19 Jul 2025புதுடில்லி : ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவி
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட்
19 Jul 2025சென்னை : இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 23-ம் தேதி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
19 Jul 2025புதுடெல்லி, பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொள்கிறார்.