Idhayam Matrimony

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியா..? - மத்திய அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

யு.பி.ஐ. செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை. ஆனால் இனி வரும் காலத்தில் யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.

அதாவது, அனைத்து யு.பி.ஐ. செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் திட்டம் மத்திய நிதி அமைச்சகம் வசம் உள்ளது. அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என்று செய்திகள் பரவின.

இந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது:-யு.பி.ஐ. வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை. எனவே, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து