எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போபால் : மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஹிர்ஹானி கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியிரான நவீன் பிரதாப் சிங்கின் வீடியோ வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலானது. இந்த வீடியோ குறித்து அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திலிப் குமார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீடியோ பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து வீடியோவில் மாணவர்களுக்கு மது வழங்கும் ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என்று கண்டுபிடிக்கப்பட்டது. என்று தெரிவித்தனர்.
உடனடியாக, தவறான நடத்தை, குழந்தைகளை மது குடிக்க ஊக்குவித்தல், ஆசிரியர்களின் கண்ணியத்துக்கு எதிராக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், மத்திய பிரதேச குடிமைப் பணி (நடத்தைகள்) விதிகளின் கீழ் ஆசிரியர் நவீன் பிரதாப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்திருக்கும் நபர், சிறுவர்களுக்கு மதுபானம் வழங்குவது பதிவாகியுள்ளது. மேலும் அதனைக் குடிப்பதற்கு முன்பு தண்ணீர் கலக்க வேண்டும் என்று அந்நபர் செல்வதும் கேட்க முடிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


