எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி, நடப்பாண்டு சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு முடிவுகளை என்.டி.ஏ. நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


