Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
SDPI 2025-04-19

Source: provided

 சென்னை : தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன.

அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி (இந்திய சமூக ஜனநாயக கட்சி) அறிவித்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி. தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள், தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து