முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியின் போது கார் விபத்தில் மீண்டும் சிக்கிய நடிகர் அஜித்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      சினிமா
Ajith 2025-04-19

Source: provided

பிரசல்ஸ் : பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெற்ற ரேஸ்  பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர் உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குட் பேட் அக்லி படத்தை முடித்து கொடுத்த கையோடு கார் ரேசிங்கில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நேற்று நடைபெற்ற ரேஸில் அஜித் குமார் பங்கேற்றார். தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்த ரேஸில் அஜித் உட்பட 3 ஓட்டுநர்கள் மாறி மாறி காரை இயக்கினர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து