Idhayam Matrimony

தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை: துரை வைகோ அதிரடி பேட்டி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
Durai-Vaiko 2024-03-24

Source: provided

சென்னை : தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், அதில் விருப்பம் இல்லை என துரை வைகோ  தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.வின் நிர்வாக குழு இன்று கூடும் நிலையில் அக்கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்துள்ளார்.  

துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, இன்று நடைபெறும் ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் செந்திலதிபன் தெரிவித்துள்ளார். நாளை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்றும், ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய துரை வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், கட்சி பதவியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து துரை வைகோ கூறியதாவது;

"என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். பதவியில் இருப்பதால் தான் பிரச்சினை வருகிறது, தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை."

இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து