Idhayam Matrimony

சஞ்சு சாம்சனுடன் மோதலா..? - ராகுல் டிராவிட் விளக்கம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dravid 2023 07 30

Source: provided

ஜெய்ப்பூர் : சாம்சனுக்கும், தனக்கும் இடையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், இருவரும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம் எனவும் டிராவிட் கூறியுள்ளார். 

சூப்பர் ஓவரில்... 

ஐ.பி.எல். தொடரில் கடந்த 16ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி வெற்றி பெற்றது.

மோதல்...

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சரை பவுலிங் செய்ய வைக்கலாம் என்று சஞ்சு சாம்சனும், சந்தீப் சர்மாவை பவுலிங் செய்ய வைக்கலாம் என்றும் ராகுல் டிராவிட்டும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பங்கேற்கவில்லை...

மேலும், பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் - ரியான் பராக்கை கேப்டன் சஞ்சு சாம்சன் முன்னிலைப்படுத்தியதாகவும், ஆனால், டிராவிட் ஹெட்மயரை முன்னிலைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது கருத்தை ஏற்காமல் ராஜஸ்தான் அணி நிர்வாகம் செயல்பட்டதால், ராகுல் டிராவிட் நடத்திய ஆலோசனையில் கூட சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. 

ஒத்த கருத்துடன்...

இந்நிலையில், சாம்சனுக்கும், தனக்கும் இடையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், இருவரும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம் எனவும் டிராவிட் கூறியுள்ளார்.  இது தொடர்பாக டிராவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கும் சஞ்சு சாம்சனுக்கும் பிரச்சனையா?. இதுபோன்ற தகவல் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது என்றே தெரியவில்லை.. நானும் சஞ்சு சாம்சனும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம். சூப்பர் ஓவரின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் போது சஞ்சு சாம்சனும் உடனிருந்தார். நாங்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் குழு, அனலிஸ்ட் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்தே முடிவுகளை எடுத்தோம்.

ஆதரவு...

அந்த முடிவுகள் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. பிரத்யேக நிபுணர்கள் எடுக்கும் முடிவுகளும் கூட சரியாக இருக்கும் என்பது கிடையாது. ஆனால், எங்கள் அணி மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சனின் முடிவுகளுக்கும் அனைத்து ஆதரவும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து