எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வீரர்கள் பட்டியலில் சச்சினை (31 இன்னிங்ஸ்) முந்தி படிதார் (30 இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்துள்ளார்.
ஓவர்கள் குறைப்பு...
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்த்து.
பஞ்சாப் வெற்றி...
பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார்.
படிதார் 1,008 ரன்கள்...
இந்த ஆட்டத்தில் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்த ரன்களையும் சேர்த்து (23 ரன்கள்) ஐ.பி.எல் தொடரில் படிதாரின் ரன் 1,000-ஐ கடந்தது. அவர் இதுவரை 34 போட்டிகளில் ஆடி 30 இன்னிங்சில் களம் இறங்கி 1,008 ரன்கள் அடித்துள்ளார்.
சச்சினை பின்னுக்கு தள்ளி...
இந்நிலையில், அவர் சாதனை பட்டியல் ஒன்றில் சச்சினை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த (இந்திய வீரர்கள் மட்டும்) வீரர்கள் பட்டியலில் சச்சினை (31 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி படிதார் (30 இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணிக்காக ஆடி வரும் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (25 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


