எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பித்ரோடா வரவேற்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே, ராகுல் காந்தி இன்று (ஏப். 21) மற்றும் நாளை (ஏப். 22) பிரௌன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பேராசிரியர்கள், மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் இந்தியா குறித்தும், பாஜக, ஆா்எஸ்எஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


