எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து வான்ஸ் விவாதிப்பாா்.
இன்று டில்லி வந்தடையும் அவர், இந்தியாவில் கலாசார பெருமைமிக்க இடங்களுக்கு சென்று பாா்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவரது பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களுக்கு அவர் வருகை தரப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
துணை அதிபரின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர் 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்துவிட்டனா். பாரம்பரியமாக கல்வியில் சிறந்து விளங்கி வரும் குடும்பத்தை சார்ந்தவர் உஷா. உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், துணை அதிபரின் மனைவி என்ற கௌரவத்துடன் உஷா சிலுகுரி வான்ஸ் தனது பூா்விகமான இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறாா். இந்தநிலையில், அவர்கள் தென் மாநிலங்களுக்கு வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டில்லி வந்தடையும் வான்ஸ் மற்றும் குடும்பத்தார், அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்குகிறார்கள். அங்குள்ள பாரம்பரியமிக்க தலங்களை பார்வையிடும் அவர்கள், அன்றிரவு பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்கள். அதன்பின், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்கிறார்கள். அங்கு பாரம்பரியமிக்க ராம்பாக் அரண்மனையில் தங்குகிறார்கள்.
அடுத்தநாள், அதாவது செவ்வாய்க்கிழமை அவர்கள் ஜெய்ப்பூரிலுள்ள பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் சர்வதேச அரங்கத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் வான்ஸ். அதற்கடுத்த நாளான புதன்கிழமை, தாஜ் மஹாலை பார்வையிடும் அவர்கள், மாலை ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள். அதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து அவர்கள் அமெரிக்கா புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


