Idhayam Matrimony

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
Zafar-Sadiq 2024-03-02

Source: provided

சென்னை : போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமும் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில், ஜாபர் சாதிக் தி.மு.க.வின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து