முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-  

போப்பாண்டவராக பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்த, இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக அவர் இருந்தார். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பாலும் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன. அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து