Idhayam Matrimony

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      இந்தியா
Naxalites 2024-11-16

Source: provided

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை  தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டதால், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 6 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நக்சல்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து