எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பதிலளித்துள்ளார்.
மும்பை அபாரம்...
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே.வை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சீசனை நோக்கி நகர்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படி விளையாடுவதில்லை...
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. ஏழு ஓவர்களில் சி.எஸ்.கே. வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் யாரும் இப்படி விளையாடுவதில்லை. கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும். ஆனால், மிடில் ஓவர்களில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடவில்லை.
திரும்புவார்களா...
போட்டிகளில் தோல்வி அடையலாம். ஆனால், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி தோற்க வேண்டும். மும்பை ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 190 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். ஆனால், சி.எஸ்.கே. அதற்கும் குறைவான ரன்களையே எடுத்தது. இந்த சீசனில் சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்களா எனத் தெரியவில்லை. அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் கூட போட்டி நிறைவடைந்த பிறகு இதனைக் கூறினார்.
அடுத்த சீசனை நோக்கி...
சி.எஸ்.கே. அடுத்த சீசனை நோக்கிச் செல்கிறது. அணியில் உள்ள இளம் வீரர்களை வளர்த்து, அவர்களை அடுத்த சீசனுக்கு தயார் செய்வதாக நினைக்கிறேன். வீரர்கள் நேர்மறையாக விளையாட வேண்டும். ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பளிக்கலாம் என்றார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


