எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
4 நாட்கள் பயணமாகஅமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அசர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர், நேற்று முன்தினம் மாலை ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இந்திய பயணத்தின் 2வது நாளான நேற்று ஜே.டி.வான்ஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அங்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் ஆம்பர் கோட்டையை ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் குடும்பத்துடன் கண்டு களித்தார்.
ஜெய்ப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜே.டி.வான்ஸ் இன்று ஆக்ரா செல்கிறார். அங்கு தாஜ்மகாலை அவர் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


