எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் நேற்று (ஏப்.22) வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த தீவிரவாதிகள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகளின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும், அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கப்படவுள்ளது. அந்த யாத்திரைக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மிகவும் நீண்ட பாதையான சுமார் 14 கி.மீ. நீளமுள்ள பயணமானது அனந்தநாக் மாவட்டத்தின் வழியாகவே மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


