Idhayam Matrimony

தமிழக கவர்னரை பதவி நீக்க வேண்டும்: வி.சி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

Source: provided

சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும் - விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் பேசியதாவது:-

கவர்னரின் அதிகாரத்தை வரையறுத்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள கவர்னர் மீதும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. ரிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தாமே முன்வந்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து