முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      உலகம்
Putin 2024-03-17

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்  என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.ஆனாலும், ஈஸ்டர் தினத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்று மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்துள்ளது. அதேவேளை, புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து