எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரத்துக்கு இடையே வரத்தில் 5 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை தாம்பரம் - திருச்சி இடையே வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 29-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை காலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06190) இயக்கப்படுகிறது. வாரத்தில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வருகிற 29-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரயில் (06191) இயக்கப்படுகிறது.
மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது. இந்த ரயில், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


