எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியில் கழிவுநீர் விடுவிப்பதைத் தடுக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "மறைமலைநகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. மேலும், 37 கோடி செலவில் 15.92 எம்.எல்.டி. கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு பட்டியலிட்டு கூறியதாவது:-
சென்னை மாநகர் பகுதி தவிர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் 3,898 நீர் நிலைகள் உள்ளது. இதில் தாம்பரம் பகுதிகளில் 211 கோடி செலவில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் 780 கோடி செலவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து செங்கல்பட்டு பகுதியில், 76.26 கோடி, மதுராந்தகம் பகுதியில் 9.50 கோடி, மறைமலைநகர் பகுதிகளில் 300.57 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


