Idhayam Matrimony

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Senthi-Balaji 2024-12-09

Source: provided

சென்னை : டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படுமென அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிறைவாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என 1-4-2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து