எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
சாய் கிஷோர் அசத்தல்...
ஐ.பி.எல். 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அசத்திவருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். பார்மில் இல்லாமல் இருந்த ரஷித் கான் தற்போது சிறப்பாக பந்துவீச தொடங்கியுள்ளார்.
கற்றுக்கொள்கிறேன்...
இது குறித்து ரஷித் கான் கூறியதாவது: போட்டிக்கு முன்பாக நானும் சாய் கிஷோரும் அதிகமாக பேசுவோம். நான் அவரிடம் பிட்ச்சுகளை நம்பி இருக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக சரியான இடங்களில் பந்துவீச வேண்டுமெனக் கூறினேன். சாய் கிஷோர் பந்துவீசும் விதமும் அவரது வேறுபட்ட வகையிலான பந்துகளும் எனக்குப் பிடித்துள்ளன. நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். நானும் சாய் கிஷோர் மாதிரி பந்துவீச நினைக்கிறேன். நான் என்னுடைய அனுபவத்தை அவரிடம் பகிர்கிறேன். அத்துடன் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதையும் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


