Idhayam Matrimony

ஜிம்பாப்வேவுக்கு முதல் எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி முன்னிலை

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      விளையாட்டு
Bangladesh 2024-05-11

Source: provided

சில்ஹெட் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

சுற்றுப்பயணம்...

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 56 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் வெல்லிங்டன் மசகட்சா மற்றும் முசரபானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

82 ரன்கள் முன்னிலை... 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னெட் 57 ரன்களும் அடித்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முன்னிலை...

பின்னர் 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்திருந்தது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 28 ரன்களுடனும், மொமினுல் ஹக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் 25 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக தாமதாக தொடங்கிய நேற்றைய நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் சிறப்பாக பேட்டிங் செய்தது. ஹசன் ஜாய் 33 ரன்களிலும், மொமினுல் ஹக் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்சன் சாண்டோ நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

சாண்டோ 60 ரன்...

3-வது நாள் முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் அடித்துள்ளது. சாண்டோ 60 ரன்களுடனும், ஜேக்கர் அலி 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வங்காளதேச அணி இதுவரை 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து