எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
5,000+ ரன்கள்...
நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐ.பி.எல். இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐ.பி.எல். இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார்.
8-வது வீரர்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
5,006 ரன்கள்...
கடந்த 2013-ம் ஆண்டு சீசன் முதல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். 130 இன்னிங்ஸில் விளையாடி 5,006 ரன்கள் எடுத்துள்ளார். 40 அரை சதம், 4 சதம் விளாசி உள்ளார். பேட்டிங் சராசரி 46.35. ஸ்ட்ரைக் ரேட் 135. 425 போர்கள், 203 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
குறைந்த இன்னிங்ஸில் 5,000 ரன்கள்:
1) கே.எல்.ராகுல் - 130 இன்னிங்ஸ்.
2) டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்.
3) விராட் கோலி - 157 இன்னிங்ஸ்.
4) ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்.
5) ஷிகர் தவாண் - 168 இன்னிங்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


