Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயருக்கு வாய்ப்பு..?

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sai-Sudarsan 2024-10-18

Source: provided

புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடர்...

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

சாய் சுதர்சன்... 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் (விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி, ஐ.பி.எல்.) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 6 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாய் சுதர்சன் (அறிமுக வீரராக), ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதம் அறிவிப்பு...

இதில் சாய் சுதர்சனை தவிர்த்து மற்ற 5 வீரர்களும் இந்திய டெஸ்ட் அணிக்காக ஏற்கனவே விளையாடிவர்கள். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மே மாதம் (முதல் அல்லது 2வது வாரம்) அறிவிக்கப்பட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து